கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி வீரமலை கிராமம் குற்றவாளியின் மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்.
நாகரசம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்து குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம், 600 லிட்டர் ஊரல், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஊரல், சாராயம் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.