கிருஷ்ணகிரி: கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது வீட்டில் சாராயம் காய்ச்சிய மாரிமுத்து(48), கனகராஜ்(38), இவரது தம்பி மகேந்திரன்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 15 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்