நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை அடுத்த திருமருகள் சந்தைப்பேட்டை ரோடு வழியாக சாராயம் கடத்தி வருவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திட்டச்சேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் காவலர்கள் திருமருகல் சந்தைப்பேட்டை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ஒரு கார் அந்த வழியாக வந்தது. அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 2,250 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்தக் காரில் சாராயம் கடத்திவரப்பட்ட ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்தனர். இந்த 3 நபர்களும் புதுச்சேரி மாநிலமான திருமலைராயன் பட்டினத்திலிருந்து முத்துப்பேட்டைக்கு சாராயத்தை கடத்தி கொண்டு செல்ல இருந்தனர்.
இதுகுறித்து திட்டச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2,250 லிட்டர் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுபோன்ற சாராய கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள்.