நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 15. 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் சோதனை நடத்தினர் அப்போது சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்திவரப்பட்ட 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 2 சிறுவர்களை கைது செய்து தஞ்சையில் உள்ள சிறார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.