திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,பேட்டை, பாமணி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவரது வீட்டில் சுவாமிசிலையை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளதாக, காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர்,திரு.ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, பிரேமா என்பவரது வீட்டில் 21.5 செ.மீ உயரமும், 1.285 கிலோ கிராம் எடையும் கொண்ட செம்பு உலோகத்திலான பெருமாள் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பிரேமாவின் வீட்டில் இருந்த1).பிரபு (வயது – 30). த/பெ. கருணைப்பிரகாசம், அண்ணாநகர், பைங்காட்டூர், தலையாமங்கலம் மற்றும் 2).அழகர், த/பெ. பரமசிவம், சோழப்பாண்டி, தலையாமங்கலம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்கண்ட செம்பு உலோகத்திலான சாமி சிலையை, மன்னார்குடி தாலுக்கா, சித்தேரி கிராமத்தினைசேர்ந்த தங்கமணி என்பவர், அழகரிடம் சிலையை கொடுத்து விற்பனை செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
தங்கமணியிடம் பெற்ற பெருமாள் சிலையினை அழகர் மற்றும் பிரபு ஆகிய இருவரும் மேற்கண்ட பிரேமாவின் விட்டில் வைத்து விற்பனை செய்ய திட்டம் தீட்டியிருந்த நிலையில் காவல்துறையினர் 1.தங்கமணி, வயது(வயது – 40). த/பெ.ராஜேந்திரன், சித்தேரி, மன்னார்குடி.2. பிரபு (வயது – 30). த/பெ. கருணைப்பிரகாசம், அண்ணாநகர், பைங்காட்டூர், தலையாமங்கலம் மற்றும் 3.அழகர், த/பெ. பரமசிவம், சோழப்பாண்டி, தலையாமங்கலம் ஆகியோரை பிடித்து, செம்பு உலோகத்திலான பெருமாள் சாமி சிலையை கைப்பற்றி, விசாரணை மேற்டிகொண்டு வருகின்றனர். மேலும் இச்சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா?, எந்த இடத்திலிருந்து சாமி சிலையை கடத்தி வந்தார்கள்?, மேற்படி நபர்கள் வேறு ஏதேனும் சிலைகளை கடத்தியுள்ளனரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேற்கண்ட நபர்களிடமிருந்து சாமி சிலையை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.