கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி கிரஷர் அருகில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்த போது சுமார் 4 யூனிட் சாதாரண கற்கள் இருந்தது கற்களுடன் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்து குருபரப்பள்ளி காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .