சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க. ஸ்டாலின், அவர்களை (04/ 8/ 2022) தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில், இருந்து ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை வந்தடைந்து உலக சாதனை படைத்ததற்காக சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் இச்சாகப் பயணம் மேற்கொண்டதற்காக தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவிற்கு உலக சாதனை புத்தகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல் துறை இயக்குனர் முனைவர் திரு.சந்திப் மித்தல் இ. கா. ப, அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மீனவர்களிடையே கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 21 காவலர்கள் 3 ஜே 80 கிளாசிக் பாய்மர படகுகள் மூலம் (9/7/2022), அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று சுமார் 540 கடல் மைதூரம் பயணம் செய்து மீண்டும் (17/7/2022), அன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தனர். இந்த மறை காவல் பாய்மர படகு பயணம் 2022 இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ராயல் மெட்ராஸ் கிளப்புடன் ஆர் எம் ஒய் சி ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்ப படகோட்ட பயணத்தின் நோக்கமானது தமிழ்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் பாதுகாப்பான சூழ்நிலை உறுதிப்படுத்துதல் கடலோரப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை முன் கூட்டியே தெரிவிக்க மீனவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு நெறிமுறைகளை பற்றி தெரியப்படுத்துதல் கடலோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை பற்றி தெரிவிப்பதற்கு பாதுகாப்பு குழுமத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1993 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆகியன ஆகும் இச்சாகப் பயணம் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தேசிய படக்கூட்டம் நிகழ்ச்சியினை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பாளர் இந்திய பாய்மரப் படகு சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இச்சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் திரு. முனைவர் வே இறையன்பு இ. ஆ.ப, தேர்வைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு கா பணிந்திட ரெட்டி காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு, சைலேந்திரபாபு IAS, மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.