திருவாரூர்: திருவாரூர்,மருதபட்டினம் டாக்டர்.கலைஞர் நகரில் வசிக்கும் செல்வன்.மாதவ் 14 த/பெ சேதுராஜன் என்ற சிறுவன் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 09-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது சொந்த முயற்சி மற்றும் அறிவை பயன்படுத்தி கணிப்பொறி சாதனமான CPU-கருவியை கையடக்க அளவில் உருவாக்கி அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.
மேற்படி சிறுவனின் சாதனையை அறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ,சிறுவன் மாதவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (29.07.21) மேற்படி சிறுவன் மாதவ் வீட்டிற்கு திடீரென்று சென்று சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்கள்.
மேலும் அச்சிறுவனிடம் வெகுநேரம் செலவிட்டு பேசி அவரது எதிர்காலம், படிப்பு,வேலை குறித்து உரையாடி சிறுவனக்கு வழிகாட்டினார்கள். மேலும் இத்தகைய சாதனையை நிகழ்த்தி திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிறுவனுக்கு நினைவுப்பரிசு டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் அக்கினிச்சிறகுகள் புத்தகம்,மற்றும் இனிப்புகள் வழங்கி
சிறுவன் மற்றும் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து சிறுவனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.