சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மாதவரம் துணை ஆணையராக பொறுப்பேற்று 15 நாட்களில் 700 கிலோ கஞ்சாவை எனும் போதை பொருகளை கைப்பற்றியுள்ளார். இதன் மதிப்பு 1, 50 கோடி. அதற்கு பிறகு இப்பொழுது 510 கிலோ கஞ்சாவை இவர் தலைமையிலான காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
கஞ்சா எனும் போதைப்பொருளை குண்டூர் இருந்து சென்னை பாடியநல்லூர் ரெட்டில்ஸ் வழியாக வரும்பொழுது பாடியநல்லூர் சோதனை சாவடியில் DC திரு.பாலகிருஷ்ணன் தலைமையில், போலீசார் 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின் ஒரு மாதம் பிறகு மீண்டும் 510 கஞ்சா எனும் போதை பொருளை விசாகப்பட்டினத்தில் இருந்து தார் ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் 510 கிலோ கஞ்சா எனும் போதை பொருளை அதே ரெட்டில்ஸ் வழியில் சோதனை சாவடி DC திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் லாரியில் இருந்து கஞ்சாவை எனும் போதைப் பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியில் கஞ்சாவை உள்ளே மறைத்து வைத்துள்ளனர். சட்டென்று பார்த்தால் கண்களுக்கு தெரியாத அளவிற்கு தொழில்நுட்பத்தோடு லாரிக்குள் மறைத்து வைத்துள்ளனர். DC திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் லாரியை மடக்கி சோதனை செய்தபோது மூன்று ரகசிய அறை உள்ள இருந்தது. அதில் கஞ்சா போதைப்பொருள் 510 கிலோ இதன் மதிப்பு 1 கோடி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
DC திரு.பாலகிருஷ்ணன் அவர் யோசனைப்படி, முதன் முதலில் சோதனைச் சாவடியில் அமைத்து போலீசார் 700 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தார்கள். பிறகு 510 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தார்கள் இதன் பெருமை துணை ஆணையர் மாதவரம் DC திரு.பாலகிருஷ்ணன் அவர்களையே சாரும். இப்படிப்பட்ட பல சாதனைகள் அமைதியாக இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார் மாதவரம் துணை ஆணையர் DC திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் அவர் பணி சிறக்க வாழ்த்துவோம்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
