தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு மற்றும் மது விற்பனை என தொடர்ச்சியாக எவ்வளவோ கெடுபிடிகளுக்கு அடிபணியாமல், பல்வேறு குற்றசம்பவங்கள் மறைமுகமாக செய்து வந்தனர்.
இது காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்து வந்த நிலையில் DIG திரு.ரூபேஷ் குமார், IPS மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், IPS ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு பதவியேற்று, இதற்கு முற்று புள்ளி வைத்துள்ளார்கள்.
இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, தொடர் திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுப்பட்டு, வந்த 400க்கும் மேற்ப்பட்ட குற்ற வழக்குகளில், தொடர்புடைய 81 ரவுடிகள், 320 சமூக விரோதிகள் கடந்த ஒரு வாரத்தில் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இது மேலும் தீவிரமடைந்து வருவதால் ரெளடிகள் கலக்கத்தில் என்ன செள்வதென்று தெரியாமல் முழுபிதுங்கி உள்ளார்கள்.
DIG திரு.ரூபேஷ் குமார், IPS மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், IPS ஆகியோருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் வாழ்த்துக்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்