ஈரோடு: கடந்த 20 வருடமாக இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள் சொக்கநாச்சி அம்மன் தெருவில் இருந்து இவருடைய வீடு வரைக்கும் சாக்கடை கழிவுநீர் கடந்த இரண்டு வருடங்களாக தேங்கி கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு முறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளார்கள். அம்மாபேட்டை யூனியன் ஆபீஸில் வேலை செய்யும் நபர் வந்து தண்ணீர் உறிஞ்சும் மோட்டரை வைத்து சாக்கடை கழிவு நீரை உறிஞ்சுகிறார்கள். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மறுபடியும் சாக்கடை கழிவுநீர் வீட்டிற்கு முன்பாக தேங்கி விடுகிறது. இவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. பூச்சி தொந்தரவுகள் அடிக்கடி வருகிறது நோய் தொற்று தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது
ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று மாற்று வழிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜெ. கோபாலகிருஷ்ணன்