திருவள்ளூர் : தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபடுகின்றனர். அதன்படி பொன்னேரி அடுத்த கடற்கரைப் பகுதிகளான பழவேற்காடு, லைட் ஹவுஸ், காட்டுப்பள்ளி, கோட்டைக்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சாகர் கவாச் ஒத்திகை காரணமாக ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்