நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் அனுமதியின்றி லாரியில் சவுடு மண் ஏற்றி சென்ற வழக்கில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே புளிச்சகாடு பிரதான சாலை இனாம்குணதலபாடி பகுதியில் சீர்காழி காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்களுடன் உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் ஆகியோர் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி சவுடு மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி போலீஸார் லாரியை ஓட்டி வந்த பூங்கனூர் மேலவருவுக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரை அப்போது கைது செய்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பண்ணைக்குட்டை சீர்காழி அசுபதி நகரைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி மணிமேகலை (32) என்பவர் தனது வயலில் பண்ணைக்குட்டை அமைத்த போது அங்கிருந்து சவுடு மண்ணை எடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணிமேகலையை நேற்று கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.