சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சர்க்கஸ் போட்டிகள் நடத்துவதற்கு வந்தனர். திருவிழா இல்லாத காரணத்தினால் தங்கள் தொழில் செய்ய முடியாமல் பசியோடு இருந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு, யாராவது உதவிகள் செய்யுங்கள் என்று வாட்ஸ்அப் மூலம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவை ஏற்று இன்று அவர்களுக்கு உடனடியாக, 150 கிலோ அரிசியும், 200 கிலோ காய்கறிகளும் இன்று சிவகங்கை உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.நாகராஜன் அவர்களுடைய தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் எஸ் எம் மணி அவர்களும் பாதிக்கப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்திற்கு, இன்று நிவாரண பொருட்கள்வழங்கப்பட்டது. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்