கிச்சிலி சம்பா : பொதுவாக வெள்ளை அரிசியையும், சன்ன ரகமாகவும் நாம் சாப்பிட விரும்புகின்றோம். அதற்கு ஏற்றார் போல வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது. மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியில் பயிரிடப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் இருந்து தைப்பட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.
கிச்சிலி சம்பா அரிசியில் உள்ள சத்துகள் : இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக இருக்கிறது. கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச்செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும்.
இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். இது எளிதில் ஜீரணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வகை அரிசியை உட்கொள்வது மிகவும் ஏற்றது, இது ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது. சர்க்கரைகுறைந்த அளவில் உள்ள உணவு. உடல் மற்றும் தசைகளின் பலப்படுகின்றது. பளப்பளபான மேனிக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் பல்வேறு நோய்களுக்கு ஏதிரானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கிறது