கோவை: கோவை, சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் தலைமையில் கொரோனா 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று 5-08-2021 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். குறிப்பாக வெளியில் வரும் பொதுமக்கள், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்> கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்