திருவாரூர் : தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள், முன்னதாக காலை (28.12.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களுக்குகான உடைபொருட்கள், காவல் வாகனங்கள், துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு, காவலர் உணவகம் மற்றும் ஆயுதப்படையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நிர்வாக பிரிவுகள் மற்றும் பண்டக பிரிவு அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri). அவர்கள் உடனிருந்தார்கள்.