வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா காவல் உதவி ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி, தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி ஆந்திர மாநில பதிவெண்கொண்ட வேன் என்பதால் சந்தேகத்தின்பேரில் வேனை நிறுத்த முயன்றன போது டிரைவர் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், குண்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் (31) என்பது தெரியவந்தது. சரக்கு வேனை திருடி ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் திரு.கருணாகரன், வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தார். மேலும் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்