தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளான உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் அமைத்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்து, அதன் மீது தினந்தோறும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களை தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் காலை 07.00 மணிக்கு ஆஜர் அணி வகுப்பு முறையாக நடத்துதல் வேண்டும் எனவும், பொதுமக்களின் புகார்களுக்கு காவல்துறை அதிகாரிகள், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைக்காமல் சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை நடத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.