கோவை: கோவையைச் சேர்ந்த சுரேஷ் 35 இவர் டீம் டெக்னாலஜிஸ் என்ற பிபிஓ கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பிருந்தா என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.பிருந்தா ஊரடங்கு காரணமாக சரிவர வேலைக்கு வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி பிருந்தா தான் வேலை செய்த நிறுவனத்திற்கு வந்து பாக்கியுள்ள சம்பளத்தை கேட்டுள்ளார்.
அப்போது அவருடைய நண்பர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ரமணிதரன் என்பவரையும் அழைத்து வந்துள்ளார் .அப்போது நிறுவனத்திலிருந்தவர்கள் முறையாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு பின்னர் பாக்கி சம்பளத் தொகைக்கான செக்கை பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்ற பிருந்தா மீண்டும் நேற்று மதியம் தனது நண்பர் ரமணிதரன் உடன் மீண்டும் வந்தார்.
மேலும் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாக்கி சம்பளத்தை கூறிய செக்கை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினார். இதனால் நிறுவன உரிமையாளர் சுரேஷ் மற்றும் பிருந்தா ,ரமணிதரன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ரமணிதரன் அவர்கள் அனைவரையும் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டி கைகளால் தாக்கினார். பின்னர் தடுக்க முயற்சி செய்த சுதந்திர குமார் கையில் கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு ரத்தம் வழிந்தோடியது. இதுகுறித்த அலுவலகத்தில் இருந்தவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளித்தார்கள்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற ரமணிதரண போலீசார் தேடி வருகின்றனர்.