திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் பகுதியில் பணத்துக்காக சிறுவனை கடத்துவதாக தனியார் டிவி லோகோவை பயன்படுத்தி எடிட்டிங் செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் பொய்யான செய்தி மற்றும் தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக கூம்பூர் பாம்புலுபட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை மாவட்ட கண்காணிப்பாளர். திரு.பிரதீப் IPS உத்தரவின் பேரில் வேடசந்தூர் சரக துணை கண்காணிப்பாளன். திருமதி.துர்கா தேவி மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்.திரு.பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா