திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் St. அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி செல்வி.A.சமீரா ஜாய்ஸ் என்பவர் சாலை விழிப்புணர்வு தொடர்பாக பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமடைந்ததையடுத்து (07.11.2022), திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மரு.N.கண்ணன்,இ.கா.ப., அவர்கள் சிறுமியின் திறமையை பாராட்டி சிறிய மடிக்கணினியை (Tab Computer) சிறுமிக்கு பரிசாக வழங்கினார். உடன் காவல்துறை துணைத் தலைவர் திருமதி.M.சத்யபிரியா,இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் இருந்தனர்.
                                











			
		    



