கோவை: கோவை மாவட்டம்,கவுண்டம்பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணபிரபு 51. என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8.01.2022-ம் தேதி ராமகிருஷ்ண பிரபுவை அறிமுகம் இல்லாத நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட பணத்தை முதலீடு செயதால் அதிக இலாபம் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறிஏமாற்றி ரூ.2,00,000/- பணத்தை இணையதளம் மூலம்அபகரித்துள்ளார்.
இது சம்மந்தமாக ராமகிருஷ்ணபிரபு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்த இரண்டு நாட்களில் துரிதமான முறையில் செயல்பட்டு 20.01.2022-ம் தேதி ராமகிருஷ்ண பிரபுவிற்கு ரூ.1,50,000/- ம் பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் உங்களின் பணத்தை இழந்து விட்டீர்களா கவலை கொள்ள வேண்டாம் தொடர்பு கொள்ளுங்கள் கோவை மாவட்ட காவல் துறையை 94981-81212, 94981 – 01165, 77081-00100.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்