திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வி. சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின்படி, சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (07.10.2025) நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி தலைமையில் மாணவிகளுக்கு பல்வேறு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளுக்கு வன்கொடுமை POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப்பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் Kaaval Udhavi App பற்றிய குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.