சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பணி ஆர்ச் பகுதியில் தொடங்கிய விநாயகர் ஊர்வலம் தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் மேற்பார்வையில், தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் தலைமையில் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஊர்வலம் திருப்பத்தூர் ரோடு CSI சார்ச் அருகே வரும் பொழுது கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த திரு.ராஜா, வழக்கறிஞர், சகாய மாதா சர்ச் துணைத்தலைவர் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த திரு.கமரூல் ஜமான் தீன் (ஜமாத் தலைவர்) ஆகியோர்கள் தலைமையில் மாற்று மதத்தினர் சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு சால்வை அணிவித்தும், குளிர்பானங்கள் கொடுத்தும் மரியாதை செலுத்தினார்கள். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி