திருவள்ளூர் : “மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இந்த உணர்வை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.
“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரை கூறுகின்றது. எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் அமைப்பு மூலமாக, மரம் வளர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காவல்துறையினரும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நியூஸ் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட அரசியல் பிரிவு மாவட்ட தலைவர் திரு.துக்காராம் பிள்ளை அவர்கள், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் திருமதி. சோபாதேவி அவர்களுடன் இணைந்து, இருளபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோயிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் திருமதி.ஷோபா தேவி, காவல் பணியில் மட்டுமல்லாது அப்பகுதியில் பல்வேறு சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அங்கிருந்த பெண்களுக்கு, மரம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மரத்தின் தேவை தற்போது அதிகரித்துள்ளது என்பதை குறித்து தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறித்தும், தயங்காமல் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இருளபாளையம் ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.கண்ணன் மற்றும் இருள பாளையம் பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதை முறையாக பராமரித்து, மரமாக உருவாக்குவோம் என்று அப்பகுதி மக்கள் உறுதியளித்தனர்.
மரங்களை வளர்ப்போம் ! “பசுமையான தாயகம் உருவாக்குவோம். இது நம்மால் முடியும்”