தேனி: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவி ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர போதிய வசதி இல்லை என்று கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினரிடம் கூறிய நிலையில் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி, காவல் உதவி ஆய்வாளர் திரு.தீவான் மைதீன், காவல் உதவி ஆய்வாளர் திரு.ரோமியோ தாமஸ் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் ஆகியோர் ஒன்றிணைந்து சற்றும் தாமதிக்காமல் மாணவியின் பள்ளிப்படிப்பை தொடர மாணவியின் கல்விக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கியும், மேலும் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முழு கல்வி செலவையும் ஏற்றுக் கொண்டனர்.
மாணவியின் எதிர்கால இலட்சிய கனவிற்காக முழு கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி, காவல் உதவி ஆய்வாளர் திரு.தீவான் மைதீன், காவல் உதவி ஆய்வாளர் திரு.ரோமியோ தாமஸ் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர். மாணவி இந்த கல்வியின் மூலம் தனது எதிர்கால லட்சியத்தை அடைந்து சமூகத்திற்கு தன்னால் இயன்ற சேவை செய்வேன் என்று உறுதி கூறினார்.
ஆதரவற்ற நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த முதியவருக்கு உதவி
அதேபோல், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாலையம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி அம்மாள் என்பவர் ஆதரவற்று மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில் கம்பம் வடக்கு நிலைய காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையிலான கம்பம் வடக்கு காவல் துறையினர் அவருக்கு உதவிகள் செய்து அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெற வழி வகை செய்தனர். காவல்துறையினரின் இச்செயலுக்கு கண்ணீர் மல்க மூதாட்டி தனது நன்றியை தெரிவித்தார்.
கொரானா ஊரடங்கின் போதும், காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி தலைமையிலான வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கி, தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.