அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரகலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் கீழ சிந்தமணி துணைத் தலைவர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் செல்வி. சண்முகப்பிரியா மற்றும் செல்வி. பத்மப்ரியா சார்பில் அளிக்கப்பட்ட கபசுர குடிநீரை காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரகலா அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கபசுர குடிநீர் அருந்துவதால் உடலின் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உடன் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.