தேனி : தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில், காலியாக உள்ள 54 ஆண்கள், 07 பெண்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று (20), வயது பூர்த்தியடைந்து சமூக சேவையில், ஆர்வமுள்ள ஆண்,பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே காவல் படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, பின்புறம் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை, பெற்றுக் கொள்ளவும்.
விண்ணப்பத்தை முழுவதும் நிரப்பி உரிய ஆவணங்களை, இணைத்து நாளை(26.05.2022) வியாழன் அன்று சமர்பிக்க வேண்டும். பின்பு, விண்ணப்பதாரர்கள் வரவழைத்து தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி, ஊர்க்காவல் படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவ்வாறாக, பணியமர்த்தப்படும் ஊர்க்காவல் படையினருக்கு, ஒரு மாதத்தில் வழங்கப்படும் 05 நாட்கள் பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் படித் தொகையாக ஊதியம், ரூ.2800 வழங்கப்படும். என தேனி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.