திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் IJM இணைந்து சமுதாய காவல் திட்டம் (safe community policing project) (விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான திட்டம்) தொடங்கப்பட்டது. 26.02.2020 அன்று சிறப்பு விருந்தினர் உயர்திரு மாவட்ட முதன்மை நீதிபதி திரு. செல்வநாதன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன், சென்னை திட்ட இயக்குனர் திருமதி. மெர்லின் பிரீடா அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 34 கிராமங்களிலிருந்து கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கொத்தடிமைகளை மீட்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்