இராணிப்பேட்டை : வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி இராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கிடவும் இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் வண்ணம் ரோந்து சுற்றியும், அங்குள்ள பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்து வந்தனர். மேலும் புயல் காரணமாக விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியதுடன், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை காவல் ஆளிநர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சரி செய்து சீரான போக்குவரத்திற்கு வழிவகுத்தனர்.
காவல் பணி, சட்டம்- ஒழுங்கைக் காப்பது மட்டுமல்ல அதையும் தாண்டிய சமுதாயப் பணி என்றும் சமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்