மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை