திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ் முத்துசாமி தலைமையில் இன்று 14.1.2021ல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன், டவுன் டி.எஸ்.பி. மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், செந்தில்குமார், வினோதா, அமுதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என மும்மதத்தினரையும் அழைத்து மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
