திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சுமார் இருபது பேர் கொண்ட திருவள்ளூர் மாவட்ட போதி சமத்துவர் புத்த தம்ம சங்கத்தினர் மகாராட்டிரம் மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள தீக்ஷா பூமிக்கு புனித பயணம் மேற்கொண்டனர். அவர்களை இரயில் நிலையத்தில் பொன்னேரி சுற்றுவட்டார சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வழி அனுப்பி வைத்தனர். இந்த சங்க நிர்வாகிகள் தன்ராஜ், வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா ஆகியோர் தலைமையில் விஜயதசமி அன்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு