சப்போட்டா பழத்தில் இயற்கையாகவே பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதனால், இந்த பழத்தை சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். சோர்வு நம்மை அண்டாது. அசதியாக இருந்தால், ஒரு சப்போட்டா சாப்பிட்டாலே போதும், இழந்துபோன எனர்ஜி உடனே கிடைத்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் தித்திப்பு நிறைந்த இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். அல்லது டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிட வேண்டும். மற்றபடி ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கும், அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த பழம் பேருதவி புரிகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், சப்போட்டா பழத்தை சாப்பிட்டாலே தீர்வு கிடைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து இந்த சப்போட்டாவில் அடங்கியிருக்கிறது. முக்கியமாக, வாய்வழி புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்கும் திறன் இந்த பழத்தக்கு உண்டு.
சிறுநீரகங்கள் சிறுநீரகத்தில் கல் இருந்தால், சப்போட்டா பழத்தை சாப்பிட சொல்லி, டாக்டர்களே பரிந்துரை செய்கிறார்கள். ஆண்டிவைரல் பண்புகள் இந்த சப்போட்டாவில் உள்ளதால், சளி, இருமல் உள்ளிட்ட தொற்றுக்கள் நம்மை அண்டாது. ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு சப்போட்டா பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அஜீரண கோளாறுகளை இந்த பழம் தீர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்ய உதவுகிறது. குடல் இயக்கத்தையும் பலப்படுத்துகிறது. பெருங்குடலில் எந்த தொற்றுக்களையும் அண்ட விடாமல் தடுக்கிறது. கண் பிரச்சனை தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண்கள் தொடர்பான பிரச்சனைகள் நெருங்குவதில்லை. பார்வை கூர்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, கண்ணின் வெளிப்புற உறை, கார்னியாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் நல்ல கண்பார்வை பராமரிப்பதில் இந்த பழம் துணைபுரிகிறது.
எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு போன்ற பல்வேறு தாதுக்கள் சப்போட்டாவில் இருக்கிறது. அதனால், மூட்டு வலி, முழங்கால் வலிகளை தடுக்கிறது. சப்போட்டா பழம் பெண்களுக்கு முக்கியமாக, பாலூட்டும் பெண்களுக்கு சப்போட்டா மிகவும் நல்லது. காரணம், கொலாஜன் உற்பத்தியிலும் சிறந்த பங்கை வகிப்பதால், கர்ப்பிணியின் வயிற்று தழும்புகளை குறைக்க இந்த பழம் உதவுகிறதாம். கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துவதால், சருமத்தையும் இந்த பழம் பாதுகாக்கிறது. வறண்ட சருமத்தை இந்த பழம் போக்குகிறது.அதேபோல, இரும்புச்சத்து நிறைந்த இந்த பழம், தலைமுடி வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான், இந்த சப்போட்டா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை, தலைமுடிக்கு பயன்படுத்துகிறார்கள்நீர்ச்சத்துக்கள் ஊட்டச்சத்தும், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த இந்த சப்போட்டாவை, அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் வரலாம். அதேபோல, பச்சையாக உள்ள சப்போட்டாவை சாப்பிட்டாலும் வாயில் புண் வரலாம். செரிமானமின்மை, வாந்தி, வயிற்று வலி வரலாம். அதனால், கனிந்த பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி