சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பெத்தானியா நகர். இப்பகுதியில் ராஜா -ராதா தம்பதி கடந்த ஒரு மாதமாக வசித்து வந்துள்ளனர். ராஜா பெயிண்டர் வேலை பார்த்த வந்த நிலையில், ராதா கோடம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். ராதா மீது ராஜாவுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.
இதனால் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரத்தில் மண்ணெண்ணை எடுத்து ராதாவின் மேல் ஊற்றிவிட்டு தீ வைத்திருக்கிறார். இதில் அலறிதுடித்த ராதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தீக்காயங்களுடன் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராதா சிகிச்சை பெற்று வருகிறார். ராஜா மீது வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.