வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களுக்கு சந்தன மரக்கட்டையை கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரஜினிகாந்த், அவர்களின் தலைமையிலான போலீசார் ஊரிஸ் கல்லூரி அருகில் சோதனை செய்தபோது சட்ட விரோதமாக சந்தன கட்டையை காட்பாடியிலிருந்து ஆரணிக்கு இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற குற்றவாளி ராஜசேகர் (28), என்பவரை மடக்கி பிடித்து குற்றவாளி மற்றும் சுமார் 20 கிலோ சந்தனக்கட்டை வனத்துறையிடம் மேல் நடவடிக்கை ஒப்படைத்தனர். இந்த சிறப்பான செயலைப் பாராட்டி வடக்கு மண்டல தலைவர் திரு கண்ணன், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்