மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாத்தியார் அணை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை வாங்கி பிரித்து பார்த்தனர். அதில் சந்தனக் கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (36), அலங்காநல்லூரை சேர்ந்த மணி (26) என்பது தெரிய வந்தது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்து, மாணிக்கம்பட்டி பகுதியில் சந்தன மரக்கட்டைகள் வெட்டி கடத்தியதாக பாலமேடு பாறை பட்டியை சேர்ந்த செல்வம், (35) திண்டுக்கல் முருகன் (30) ஆகிய 2 பேரையும் பாலமேடு போலீசார் குட்லாடம்பட்டி பகுதியில் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 50 கிலோ சந்தனக்கட்டைகளும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி