சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா, மற்றும் பத்மினி, கிரன் 8.5 புள்ளிகளையும், தமிழகத்தின் சரண்யா, சிட்டாஞ் சாக்ஷி, கோமஸ் மேரி வர்ஷினி, ரவிரக்ஷிதா ரவி மற்றும் கல்கர்ணி பக்தி ஆகியோர் 8 புள்ளிகளையும் பெற்றனர். இவர்களுக்கு 5,50,000, ₹4,50,000, ₹3,50,000, ₹2,50,000, ₹2,00,000, ₹1,50,000, ₹1,50,000, ₹1,00,000, ₹1,00,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டன. பி.ஸ்டீபன்,சப் கலெக்டர் ஆயுஷ் மற்றும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சேர்மன் எஸ்.பி.குமரேசன், அருண்குமார், ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி