திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (29.04.2025) அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கற்கபவள்ளி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது அங்கே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூர், கரையிருப்பு சுந்தராபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகநயினார்(56). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.