திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களான கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனை, அண்டை மாநில மது கடத்தல், சட்ட விரோத மணல் கடத்தல், லாட்டரி விற்பனை, சூதாட்டம், வழிப்பறி, ரௌடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடத்தின்படி, அதன்படி வார இறுதி நாட்களில் (02.08.2025 – 03.08.2025) திருவாரூர் மாவட்டத்தில். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட – 44 நபர்கள் கைது செய்யப்பட்டு, 1105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும்,
தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டத – 03 நபர்கள் கைது செய்தும், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட- 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, ரூ.60,000/- பறிமுதல் செய்தும்,
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகள் பதிவு செய்து, வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மேற்படி வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.