தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியான மீமீ என்கிற செந்தமிழ் செல்வன் என்பவரை (12.10.2024)-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் இருந்தார். இதன் தொடர்ச்சியாக குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்களின் வேண்டுகோளின் படி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஷ் ராவத் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதின் படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.