திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களான கள்ளசந்தையில் மது விற்பனை, கஞ்சா, தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனை, மதுபோதையில் பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், ஆயுதத்தை காட்டி மிரட்டுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா விற்ப்பனையில் ஈடுபட்ட – 1.ஹபீப் ரஹ்மான் (56/24). த/பெ.முகம்மது காசிம், அரபாத் தெரு, புதுக்குடி. 2) வடபாதிமங்கலம் காவல் சரகத்தில் முருகமணி (21/24).த/பெ.செல்லப்பா, ஆண்டிக்குளத் தெரு, வடபாதிமங்கலம். 3) வலங்கைமான் காவல் சரகத்தில் அஜய் (23/24). த/பெ.செல்வம், காந்தி நகர், ஆவூர், வலங்கைமான். 4) மன்னார்குடி நகர காவல் சரகத்தில் சுந்தர் (27/24). த/பெ.இளங்கோவன், காத்தாயி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி ஆகியோரிடமிருந்து தலா 100 கிராம் எடையுள்ள கஞ்சாவும். 5) நீடாமங்கலம் காவல் சரகத்தில் கவினேஷ் (20/24). த/பெ.கார்த்தி, காலனி தெரு, பரப்பனமேடு என்பவரிமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
கள்ளசந்தையில் மது விற்பனையில் ஈடுப்பட்டதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. சிறப்பாக செயல்பட்டு மேற்படி வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.