திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களான மதுபோதையில் பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், ஆயுதத்தை காட்டி மிரட்டுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் (26.10.2024 – 27.10.2024) சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு tractor மற்றும் டிப்பர் லாரி பறிமுதல் தடை செய்யப்பட்ட online lottery விற்பனை செய்த 4 நபர்கள் மற்றும் பணம் வைத்து சீட்டு விளையடிய 3 நபர்களும் கைது. கள்ளசந்தையில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்யப்பட்டு , கடத்தலுக்கு பயன்படுத்திய 2- இருசக்கர வாகனம் மற்றும் 1- நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 82 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. சிறப்பாக செயல்பட்டு மேற்படி வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.