இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி (01.07.2025) ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் தலைமையிலான போலீசார் ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளி அஜித் த/ பெ விஜயன் கைது செய்து அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 3 Bolero வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மணல் திருட்டில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.