திருவாரூர் : நன்னிலம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை விற்பனை செய்து வந்த நபர் கைது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நல்லுமாங்குடி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த ராஜகோபால் அவர்களின், மகன் சேகர் அவரின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நடத்தப்பட்ட சோதனையில் ஹான்ஸ் 495 பாக்கெட் பான் மசாலா 180 பாக்கெட்டுகள் V1 270 பாக்கெட்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டது. இது போன்று சட்டவிரதமாக புகையிலை விற்பனை செய்யும் நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் ஜெயகுமார் எம் எஸ் சி அக்ரி அவர்கள், எச்சரித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்