குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜாங்கபெருமாள்* அவர்கள் மற்றும் போலீசார் சாமியார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கேரள பதிவெண்ணை கொண்ட இன்னோவா கார் வேகமாக வந்துள்ளது.
அதனை நிறுத்தி அதிலிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கேரள மாநிலம் நியமம் பகுதியை சேர்ந்த அன்வர்தீன் 34, ஹாஜாஹூசைன் 36, மற்றும் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த ஜோஜோ 35, என்பது தெரியவந்தது. பின்பு அவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தார். மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அவர்கள் குட்கா பதுக்கி வைத்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.அதன்பின் அவர்களிடமிருந்து 297 கிலோ குட்கா மற்றும் ரூபாய் 16,500 /- ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
பின்பு அவர்கள் மீது திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல் காதர் அவர்கள் வழக்கு பதிவு செய்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.