இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் பட்டிணம்காத்தான் பகுதியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த பொழுது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக காரில் கஞ்சாவை கடத்திய ரஞ்சித்குமார், ஹேமலதா, அஜய்குமார் மற்றும் மைக்கல் சாம்ராஜ் என்பவர்களை NDPS Act –ன் கீழ் கைது செய்தார். மேலும், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 25 Kg கஞ்சாவை பறிமுதல் செய்தார்.