இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மண்டபம், செம்மட்டி பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இருவரை விசாரணை செய்ததில்,
அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மரியரோஸ் மற்றும் அந்தோணி பிச்சை ஆகிய இருவரையும், ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய் 16,120 கைப்பற்றப்பட்டது.