தூத்துக்குடி : தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு (19.09.2022) துவங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி சட்டவகுப்பிற்கான முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் திரு. ராசராசன், அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஜஸ்டின் ராஜ், திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன், முதன்மை கவாத்து போதகர் காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கர், முதன்மை சட்ட போதகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜென்ராஸ் பாபுனி ஆகியோர் உடனிருந்தனர்.